நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு
மங்களூரு : கர்நாடகாவின் இரண்டு வெவ்வேறு கிராமங்களில் நீரில் மூழ்கி சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர்.
சித்ரதுர்கா மாவட்டம், ஹொலல்கெரே தாலுகாவின், லட்சுமி சாகரா கிராமத்தில் வசித்தவர் மைனா, 9. இவர் தன் பெரியம்மா ஊரான பி.துர்காவில் நடந்த திருவிழாவுக்கு, நேற்று மதியம் குடும்பத்துடன் வந்திருந்தார்.
மாலையில் தன் அக்காவுடன், தோட்டத்துக்கு சென்றிருந்தார். இங்குள்ள குளம் அருகில் விளையாடும் போது, கால் தவறி மைனா குளத்தில் விழுந்தார். உறவினர்கள் சிறுமியை நீரில் இருந்து மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியில் அவர் உயிரிழந்தார்.
சிக்க ஜாஜுர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், சுரத்கல்லின், சூரிஞ்சே கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினரின் திருமண நிகழ்ச்சிக்காக தியான் பஞ்சன், 18, ஹனீஷ் குலால், 15 மற்றும் குடும்பத்தினர், மும்பையில் இருந்து வந்தனர்.
நேற்று மாலையில், தங்களின் உறவினர்களுடன், சுரத்கல்லில் உள்ள கடற்கரைக்கு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த போது, தியான் பஞ்சனும், ஹனீஷ் குலாலும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த லைப் கார்டுகள், ஹனீஷை வெளியே கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீரில் அடித்து செல்லப்பட்ட ஹனீஷ் குலாலை தேடி வருகின்றனர்.
மேலும்
-
டூவீலரில் கஞ்சா கடத்திய மூவர் கைது
-
அடுத்தவர் ஏ.டி.எம்., கார்டில் பணம் எடுத்து ஏமாற்றியவர் மீது வழக்கு
-
இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 50 கிலோ கடல் குதிரை பறிமுதல் ஒருவர் கைது
-
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா
-
ஆமைவேகத்தில் 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணிகள் : உத்தமபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
-
தற்கொலை