மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
உத்தமபாளையம், :உத்தமபாளையம் அருகில் உள்ள ராமசாமி நாயக்கன்பட்டியில் சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் நேற்று காலை ராமசாமி நாயக்கன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.
வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று மாலை ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் 60, என்ற தொழிலாளி அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டுள்ளார். அவர் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பலியானார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement