மயிலம் பொறியியல் கல்லுாரியில் முதுகலை பட்டப்படிப்பு கருத்தரங்கு

விழுப்புரம் : மயிலம் பொறியியல் கல்லுாரியில் இளங்கலை மாணவர்களுக்கான முதுகலை பட்டப்படிப்பு விழிப்புணர்வு குறித்த 'கான்குயர் 25' ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

மேலாண்மைத் துறை மற்றும் கணினி பயன்பாட்டியியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் 30க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

துவக்க நிகழ்ச்சிக்கு, மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்விக்குழுமம் செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். இயக்குனர் செந்தில், பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம் ரேபசினர்.

தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில், பங்கேற்றோருக்கு ரொக்க பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை முதுகலை வேளாண்மை துறை தலைவர் மதன் செய்தார். கணினி பயன்பாட்டியியல் துறை தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Advertisement