ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்
போடி, : போடி கொம்புதூக்கி அய்யனார் கோயிலில் இருந்து கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி இன்றி மலைக் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டது கொம்புதூக்கி மலைக் கிராமம்.
இப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும், 1200 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களும் உள்ளன. இலவம், காபி, எலுமிச்சை, தென்னை போன்ற பயிர்கள் பயிடப்பட்டுள்ளன. கொட்டகுடி பகுதியில் வசிக்கும் மக்களின் குலதெய்வமான கொம்பு தூக்கி அய்யனார் கோயில், கண்ணகி கோயிலுக்கு செல்லவும் ரோடு வசதி இல்லாமல் உள்ளது.
இதனால் விளை பொருட்களை கொண்டு வர முடியாமல், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கொம்புதூக்கி - கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
Advertisement
Advertisement