டிரைவர் கொலை வழக்கில் இருவரிடம் போலீசார் விசாரணை
இளையான்குடி: இளையான்குடி அருகே வேலடிமடை பஸ் ஸ்டாப்பில் துாங்கிக் கொண்டிருந்த டிரைவரை கொலை செய்த வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிற நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வேலடிமடை பஸ் ஸ்டாப்பில் துாங்கிக் கொண்டிருந்த திருவாரூர் மாவட்டம் சிறுகளத்துார் கிராமத்தைச் சேர்ந்த கதிரடிக்கும் இயந்திர டிரைவர் மகேஷை ஏப்.14ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு 2 டூவீலர்களில் வந்தவர்கள் அவரை அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
சத்தம் கேட்டு வந்த கிளீனர் நவீனையும் அரிவாளால் வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. இளையான்குடி போலீசார் இக்கொலை குறித்து டி.எஸ்.பி., அமலஅட்வின் மற்றும் போலீசார்கள் தலைமையில் 3க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து விசாரித்தனர். மானாமதுரை மூங்கிலூரணி பகுதியை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரையும், மற்றொருவரையும் பிடித்து விசாரிக்கின்றனர்.மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய 3க்கும் மேற்பட்டோரையும் தேடி வருகின்றனர்.
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னை மேடவாக்கத்தில் அதிக கனமழை; மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி