எலக்ட்ரீசியன் பலி

திருவாடானை : தொண்டி அருகே பாண்டுகுடி வடக்கு குடியிருப்பை சேர்ந்தவர் நாகநாதன் 41. எலக்ட்ரீசியன் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் ஓரியூரிலிருந்து திருவாடானை நோக்கி டூவீலரில் சென்றார்.

பாண்டுகுடியில் ரோட்டோரத்தில் காவிரி குடிநீர் பைப் லைன் பதிப்பதற்காக தோண்டப்பட்ட மண் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் தவறி விழுந்த நாகநாதன் அதே இடத்தில் இறந்தார். மனைவி தவமணி புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement