தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை ஏப்.22 விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சிவகங்கை : தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவச சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்.22 தொடங்கவுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆர்டிஇ தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்பவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டுக்கான 2025-=26 இலவச சேர்க்கைக்கு இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்.22 தொடங்கப்படவுள்ளது.
பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமுடியும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், 3ஆம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், துாய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியமாகும். பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.22 முதல் மே.20 வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றனர்.
மேலும்
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!