அழகுபடுத்துதல் பெயரில் அலங்கோலமாகும் 'கொடை' ஏரி

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரியை அழகு படுத்துதல் பெயரில் பணிகள் தரமற்று நடப்பதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
கொடைக்கானலின் முக்கிய பகுதியாக இருப்பது ஏரியாகும். 3 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டது.இதில் கிரானைட் கற்களுடன் நடைமேடை புதுப்பிப்பு, புதிய வேலி அமைத்தல், படகு குழாம், ஏரோட்டர், நீரூற்று, பயோ பிளாக் கற்கள் அமைத்தல், புதிய படகுகள் வாங்குதல், அலங்காரம் மின்விளக்கு, குதிரை, சைக்கிள் சவாரிக்கான தனித்தனி வழித்தடங்கள், பயணிகள் அமர்வதற்கு நிழற்குடை என இத்திட்டம் துவங்கப்பட்டது. பணிகள் துரிதம் பெறாது தரம் என்பது அறவே இல்லை. இதில் நடைமேடை பணிகள் ஆண்டு கணக்கில் மந்தகதியில் நடப்பதும், ஆங்காங்கே கட்டுமான குவியல், புதிதாக அமைக்கப்பட்ட எப்ஆர்பி வேலிகளில் வெடிப்பு, அலங்கார மின் விளக்கு உறுதியற்ற நிலையில் சாய்வது என உள்ளது.
பணிகள் முழுமை பெறாத நிலையில் கிரானைட் கற்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. நடைமேடை வடிவமைப்புகள் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி இல்லாமல் ஒழுங்கற்ற நிலையில் உள்ளன. இப்பணிகளை புதிதாக கற்றுக்கொள்ளும் நபர்களின் களம் போல் மோசமான நிலையில் உள்ளது.துவக்கத்தில் எப்ஆர்பி வேலி அமைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உற்பத்தி குறைவு காரணமாக வேலி அமைக்கும் பணியும் கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட வேலிகளும் சேதம் அடைந்து சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஏரியை அழகுபடுத்துதல் என்ற பணி கண்துடைப்பு பணியாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆட்சியாளர்கள் வரும் போதும் ஏரியை பாடாய்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மாறாக இயற்கை சிதைவுகளால் கட்டுமான குவியல்களின் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. ஏரி என்றால் நினைவுக்கு வருவது படகு சவாரி, குதிரை , சைக்கிள். ஆனால் இவை அலங்கோலமாக காட்சியளிக்க அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நகராட்சி அதிகாரி கூறுகையில்,'' அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் ஏரிச்சாலை பணிகள் திருப்திகரமாக இல்லாத நிலை உள்ளது.இருந்த போதும் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறோம்'' என்றார்.
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி