சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மரக்கன்றுகள் நடும் விழா

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட நீதித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் க.விலக்கு - வைகை அணை ரோட்டின் ஓரங்களில் வேம்பு, வாகை, புங்கை உட்பட பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டனர்.
நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு பராமரிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரங்கள் வளர்ப்பின் அவசியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறையினர் செய்திருந்தனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்