கார் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் காயம்

மூணாறு; மூணாறு அருகே கார் தேயிலை தோட்டத்தினுள் கவிழ்ந்து தெலுங்கானாவைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

தெலுங்கானாவில் மெதல்மல்க்கஜ்கிரி பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு காரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டை கடந்து லாக்காடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் இறக்கத்தில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

கவுதம் 22, ஹிருத்திக் 24, சிஷாந்த் 25, ஆகியோர் பலத்த காயம் அடைந்த நிலையில் மூன்று பேர் காயம் இன்றி தப்பினர். அந்த வழியில் வந்தவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் காயம் அடைந்தவர்களை மீட்டு மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement