310 கி.மீ., பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்

வடமதுரை; திண்டுக்கல் மாவட்டத்திற்குள் பழநி முருகன் கோயில் இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 70 பேர் கரூர் மாவட்டம் கட்டளைக்கு பாதயாத்திரையாக சென்று காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்தப்படி 310 கி.மீ., துாரம் பாதயாத்திரையாக பழநி சென்றனர்.
சாணார்பட்டி மருநுாத்து அருகே சாமிநாதபுரத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது.
இக்கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்த காவடியுடன் பழநிக்கு பாதயாத்திரை பயணம் செய்வர்.
இந்தாண்டிற்காக ஏப்.14ல் பாதயாத்திரையாக புறப்பட்ட 70 பேர் கரூர் மாவட்டம் கட்டளைக்கு பாதயாத்திரையாக சென்று காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து கொண்டு மீண்டும் பாதயாத்திரையாக ஊர் திரும்பினர்.
நேற்று மாலை மேலும் பல பக்தர்களுடன் தீர்த்தக்காவடிகளுடன் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
கட்டளை சென்று வர 220 கி.மீ., பழநிக்கு 90 கி.மீ., என 310 கி.மீ., துாரம் பாதயாத்திரையாக சென்றனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்