3 பள்ளி மாணவர்கள் பரிமாற்ற விழா

புதுச்சேரி; குருசுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில், இந்திரா நகர் அரசு தொடக்கப்பள்ளி, தாவீத்பேட் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற பரிமாற்ற விழா நடந்தது.

ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சிறந்த செயல்பாடுகள் மற்றும் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் நடந்த விழாவிற்கு, குருசுகுப்பம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.

இந்திரா நகர், அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முத்துலட்சுமி, தாவீத்பேட் பொறுப்பாசிரியர் வசுதா முன்னிலை வகித்தனர்.

விழாவில் மூன்று பள்ளி மாணவர்கள் இடையே நடனம், பாடல்கள், விளையாட்டு, ஓவியம் மற்றும் வினாடி வினா உள்ளிட்ட திறன் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளை ஆசிரியைகள் நித்தியானந்தி, அன்பரசி, கிரிஜா, ஆனந்தராஜ், சந்திர விமலி, பாக்யஸ்ரீ, ரேவதி, சாரதா, சக்தி பிரியா ஆகியோர் நடத்தினர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் பென்சில், பேனா, விளையாட்டு உபகரணங்கள், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டன.

Advertisement