வாய்க்கால் அமைக்கும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

புதுச்சேரி; முதலியார்பேட்டையில் வாய்க்கால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் முதல் தெரு, இரண்டாவது குறுக்கு தெருவிற்கு ரூ. 25 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பணியினை சம்பத் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலைப்பொறியாளர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement