வாய்க்கால் கட்டும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருபுவனை; மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் கலிதீர்த்தால்குப்பம் - ஆண்டியார் பாளையம் சாலை, மயிலம் சாலை சந்திப்பில், புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையின் சார்பில், ரூ.27.66 லட்சம் செலவில் வாய்க்கால் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜைசெய்து பணியை தெடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement