தனியார் கம்பெனி ஊழியருக்கு வெட்டு; வாலிபருக்கு வலை

நெட்டப்பாக்கம்; தனியார் கம்பெனி ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்னர்.

கடலுார் மாவட்டம், ஆண்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜிந்தா, 21; கல்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர். அதே கம்பெனியில் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவா, 27; ரஞ்சித், 24, ஆகியோர் வேலை செய்கின்றனர்.

நேற்று முன்தினம் ரஞ்சித் பணியில் இருந்தபோது ஜீவா, ரஞ்சித்தை காட்டு பூனை என்று கூப்பிட்டு கிண்டல் செய்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து இரவு 10:45 மணியளவில் பணி முடிந்து, ரஞ்சித்தும், ஜிந்தாவும் ஒரே பைக்கில் வெளியே வந்தனர்.

அப்போது கம்பெனி எதிரில் நின்று கொண்டிருந்த ஜீவா பட்டா கத்தியால் ரஞ்சித்தை வெட்ட ஓடினார். சுதாரித்துக் கொண்ட ரஞ்சித், ஜிந்தா அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதில் ஜிந்தா ஒரு வீட்டின் உள்ளே மறைய முயன்ற போது, ஜீவா கத்தியால் வெட்டினார். ஜிந்தா வலது கையில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

அவரது புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து ஜீவாவை தேடி வருகின்றனர்.

Advertisement