அந்த நிலையில் நாம் இருந்தால்...?

நீங்கள் சாலையில் நடந்து செல்லும் போது, திடீரென ஒரு வாகனம் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், சுற்றியிருந்த யாரும் உதவ முன்வரவில்லை. உங்களை விபத்துக்குள்ளாக்கியவரும் வண்டியை நிறுத்தாமல் சென்றுவிட்டார். வலியால் துடித்து கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு முயற்சித்தும், உங்களால் எழ கூட முடியவில்லை எனில், அச்சூழலில் என்ன செய்வீர்கள்?
கற்பனை செய்து கூட, பார்க்க முடியாத இச்சம்பவத்தில் நீங்கள் உயிர்பிழைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதேசூழலில், ஒரு நாயை என்றாவது பொருத்தி பார்த்ததுண்டா? அவைகளால், தன்னுடைய இந்நிலைக்கு யார் காரணம் என சொல்ல முடியாது. எங்கு வலிக்கிறது என அடையாளம் காட்ட முடியாது. அடிபட்ட பப்பிக்கு உரிமையாளர் இருக்கும் பட்சத்தில் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்.
தெருநாயாக இருந்தால், யாராவது இரக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் தான் உண்டு. இல்லாவிடில், ரத்தம் சொட்ட சொட்ட அதே வலியுடன், நாள், வாரம், மாதம் மட்டுமல்ல சில சமயங்களில் வாழ்நாள் முழுக்க, ரண வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக பராமரிக்க ஆளின்றி, பசியோடு சுற்றி திரியும் தெருநாய்களுக்கு தான், இதுபோன்ற அசம்பாவிதங்கள் அதிகம் நிகழ்கின்றன.
நாம் என்ன செய்யலாம்
இதுபோன்ற சமயங்களிலாவது, பிற உயிர்கள் மீது சிறிதளவேனும் இரக்கம் காட்ட வேண்டும். வலி என்பது எல்லா ஜீவன்களுக்கும் பொதுவானது என்ற உணர்வு, நமக்குள் மேலிட வேண்டும். இதுவே, நமக்கு ஆறாவது அறிவு இருக்கிறது என்பதற்கான அடிப்படை.
உங்களால் முடிந்தால், அதன் மருத்துவ சிகிச்சைக்கும், பராமரிப்புக்கும் பொறுப்பேற்று கொள்ளலாம்.
அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கலாம். அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு தகவல் அளிக்கலாம்.
'ஆக்டிவ்'வாக இருக்கும் தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
சமூக வலைதளங்களில், ஒரு புகைப்படம் எடுத்து இருப்பிடத்தை குறிப்பிட்டு, தகவல் பகிரலாம். இப்படியாக ஏதாவது ஒருவழிமுறையில், அந்த ஜீவனின் வலியில்லாத வாழ்வுக்கு வழிவகை செய்யலாம்.
இதுதான் தீர்வு
நம் நாட்டில், தெருக்களில் தான் நிறைய நாய்கள், பூனைகள் பிறக்கின்றன; வாழ்கின்றன. அவற்றிற்கான குடியுரிமை அத்தெருக்களே என்பதால், அதன் வசிப்பிடத்தில் இருந்து அப்புறப்படுத்த கூடாது.
அந்தந்த பகுதியில் குடியிருப்போர் இணைந்து, அவற்றிற்கு உணவளிப்பது, பராமரிப்பது, அரசு கால்நடை மருத்துவர்களின் துணையுடன் தடுப்பூசி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.
நம்மை பாதுகாப்பாக பார்த்து கொள்ளும் நன்றியுள்ள அந்த ஜீவன்களுக்கு, கொஞ்சம் உணவும், கொஞ்சம் இரக்கமும் காட்டினாலே போதும்.
- பபிதாராஜ், வழக்கறிஞர் மற்றும் நிறுவனர், 'மாத்வராஜ் அனிமல் கேர் டிரஸ்ட்' உடுப்பி, கர்நாடகா.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது