பங்கு சந்தை நிலவரம்

மூன்றாவது நாளாக உயர்வு



புளூசிப் வங்கி பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதாலும்; அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ததாலும் மும்பை, தேசிய பங்குச் சந்தைகள், நேற்று மூன்றாவது நாளாக உயர்வு கண்டன.



கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் வீழ்ச்சி கண்டதன் காரணமாக, வங்கிக் கடன் வட்டி மேலும் குறையும் என்ற நம்பிக்கை, பங்கு வர்த்தகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.சர்வதேச சந்தைகளில் பெரும்பாலானவை சரிவு கண்ட நிலையிலும், இந்திய சந்தைகள் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மீண்டும் 77,000 புள்ளிகளை கடந்தது. இண்டஸ் இண்ட் வங்கியின் பங்கு விலை அதிகபட்சமாக 7.12 சதவீத உயர்வு கண்டது.


ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., ஆகிய நிறுவன பங்குகள் விலையும் உயர்ந்தன. மாருதி சுசூகி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு கண்டன.

அன்னிய முதலீடு



அன்னிய முதலீட்டாளர்கள் 3,936 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்



உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.91சதவீதம் அதிகரித்து,
65.22 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு



அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா உயர்ந்து, 85.64 ரூபாயாக இருந்தது.

Advertisement