செனாய் நகரில் மே 1 முதல் இலவச சிலம்ப பயிற்சி
சென்னை,
செனாய் நகரில் கோடை கால இலவச சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி, மே 1 முதல் துவங்குகிறது.
சுவாமி விவேகானந்தா ஆல் ஸ்போர்ட்ஸ் யூத் அசோசியேஷன், சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் ஆகியவை இணைந்து, இந்தாண்டிற்கான கோடைகால இலவச சிலம்ப தற்காப்பு கலை பயிற்சியை, மே 1 முதல், 31ம் தேதி வரை நடத்த உள்ளன.
இந்த பயிற்சி முகாம், ஈஸ்ட் கிளப் சாலை, செனாய் நகர் ஸ்கேட்டிங் பார்க்கில் நடக்கிறது. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 6:00 முதல் 8:00 மணி வரை ஒரு வகுப்பும், மாலையில் 4:00 முதல், 7:00 மணி வரை மூன்று வகுப்புகளும் நடக்க உள்ளன.
சனி, ஞாயிறு அன்றும் வகுப்புகள் நடைபெறும். இதில், 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, 90940 32387, 88388 11467 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சங்க பொதுச்செயலர் ஏழுமலை தெரிவித்தார்
மேலும்
-
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்