ஆயுதப்படை மைதானத்தில் கழிவுநீர்  போலீசார் பயிற்சியில் ஈடுபடுவதில் சிக்கல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், காவலர் பயிற்சி பள்ளி அருகில் ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு, காலை, மாலையில், போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் இங்கு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், மைதானத்தின் நிலத்தடி வழியாக செல்லும் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், மைதானத்திற்குள் வழிந்தோடி வருகிறது.

இதனால், போலீசார் பயிற்சியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், பள்ளி மாணவர்களும் விளையாட முடியாத சூழல் உள்ளது.

எனவே, காவலர் பயிற்சி பள்ளி, ஆயுதப்படை மைதானத்தில், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement