பாதாள சாக்கடைக்கு தோண்டியசாலையை சீரமைப்பது எப்போது?

நாமக்கல்:நாமக்கல்-மோகனுார் சாலையில், முல்லை நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில், எம்.எல்.ஏ., அலுவலகம், கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.


இந்த சாலை வழியாக பொன்விழா நகர், அழகு நகர், ரயில்வே மேம்பாலம் வழியாக திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் உள்ளது. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். சில மாதங்களுக்கு முன், முல்லை நகர் பகுதியான மோகனுார் சாலை பிரிவில் பாதாள சாக்கடை அமைக்க, சாலை நடுவே பள்ளம் தோண்டினர். குழாய் பதிக்கும் பணி முடிந்து, பள்ளத்தை மூடி வெகுநாட்கள் ஆகிறது. ஆனால், சாலையை சீரமைக்காததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகளை தடுமாற செய்து வருகிறது.

எனவே, பாதாள சாக்கடை பணிக்கு தோண்டிய இடத்தில், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement