ஜாலியாக நீந்தும்

வெயில் காலம் துவங்கிவிட்டதால், இனி தண்ணீரை கண்டாலே, பப்பி தாவி குதித்து, நீச்சலடிக்க வேண்டுமென அடம்பிடிக்கும்.

நீச்சல் குளத்தில் இறங்கிய வேகத்தில், துள்ளி குதித்து, குட்டிக்கரணம் போட முயற்சிக்கும். இச்சமயங்களில், பப்பியின் பாதுகாப்பிற்காக, வாட்டர் காலர் இருந்தால், எவ்வளவு சேட்டை செய்தாலும் கவலையின்றி இருக்கலாம். இதை உடலில் மாட்டிவிட்டால், தண்ணீருக்குள் மூழ்க முடியாது.

கழுத்தில் மாட்டிவிடும் வகையிலான நீச்சல் காலரை மாட்டிவிட்டால், மூக்கு, காது பகுதிகளில் தண்ணீர் செல்வதால் ஏற்படும் உடல் உபாதைகளில் இருந்து, பப்பியை தற்காக்க முடியும். ஆன்லைனில் நிறைய கலர்களில், வெவ்வேறு அளவுகளில் கிடைப்பதால், ஆர்டர் செய்து, பிடித்ததை வாங்கி கொள்ளுங்கள்.

Advertisement