ஜல்லிக்கட்டு மைதான பணி 80 சதவீதம் நிறைவு



சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில், 19ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இப்போட்டியில், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 600க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.


இதனால், ஜல்லிக்கட்டு மைதானத்தில், கடந்த, 20 நாட்களாக வாடிவாசல், காளைகள் சென்று முடியும் பகுதி, பார்வையாளர்கள் நின்று பார்க்கும் இடம், பேரிகார்டு அமைக்கும் பணி நடந்து வந்தது. இதுவரை இப்பணி, 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை, நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசு, ஆர்.ஐ., பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement