விடுதி மாணவருக்கு பாலியல் தொந்தரவுமோகனுார் மெட்ரிக் பள்ளி வார்டன் கைது

மோகனுார்:ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் மெட்ரிக் பள்ளி விடுதி வார்டனை, 'போக்சோ' வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்தவர், 14 வயது மாணவர். இவர், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு, விடுதி வார்டனாக, எருமப்பட்டி அடுத்த திப்ரமாதேவியை சேர்ந்த வினோத் பணியாற்றி வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த மாணவரை, 2024 ஆக., 4ல், இரவு, 11:00 மணிக்கு, வார்டன் வினோத், தன் அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதேபோல், கடந்த, 3 இரவு, 11:00 மணிக்கு, மாணவரை தண்டனை எனக்கூறி, மீண்டும் தன் அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, மாணவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மோகனுார் போலீசில் புகாரளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், விடுதி வார்டன் வினோத் மீது, கடந்த, 9ல், 'போக்சோ' வழக்கு பதிந்து, 10ல் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement