'அபாகஸ்' வகுப்பில் தேர்ச்சிஅரசு பள்ளி மாணவருக்கு பரிசு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 'அபாகஸ்' வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். அக்ரஹாரம் பஞ்., முன்னாள் தலைவர் வெங்கடாசலம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமி ஆகியோர், மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
பள்ளிப்பாளையம் மத்திய அரிமா சங்க உறுப்பினர்கள் வேலு, பழனியப்பன், தலைமை ஆசிரியர் மெஜலா, இந்த கணிதத்தை எளிய முறையில் கற்றுத்தந்த, 'நல்லாசிரியர்' விருது பெற்ற சொர்ணதீபம் மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். விழாவில், அக்ஷயாஸ்ரீ என்ற சிறுமிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பள்ளிப்பாளையம் மத்திய அரிமா சங்கம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.