ரூ.70,000 மதிப்பு புகையிலை பறிமுதல்மளிகை வியாபாரி உள்பட 2 பேர் கைது



நாமக்கல்:வாகன சோதனையில், 70,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மளிகை வியாபாரி உள்பட, இரண்டு பேரை கைது செய்தனர்.


நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, நல்லிபாளையம் பகுதியில், எஸ்.ஐ., செல்வராசு தலைமையில், எஸ்.எஸ்.ஐ., பாலசுப்ரமணி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த, 'ஐ10' காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், நாமக்கல், நல்லிபாளையம் பாரதிதாசன் நகரை சேர்ந்த ரமேஷ் மகன் மவுனீஸ், 22, நாமக்கல் கந்து முத்துசாமி தெருவை சேர்ந்த மளிகை வியாபாரி பிரவீன்குமார், 21, என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த நல்லிபாளையம் போலீசார், 70,000 ரூபாய் மதிப்புள்ள, 132 கிலோ புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.









Advertisement