மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை கொள்ளை
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் மாடி வீட்டில்குடியிருப்பவர் நுார்ஜஹான் 80. கணவர் அப்துல்லா இறந்துவிட்டார். கீழ் தளத்தில் மகன் குப்துப் ஜமான் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு வீட்டில் நுார்ஜகான் தனியாக இருந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர் நுார்ஜகானை தாக்கிய அவர் அணிந்திருந்த தோடு, மோதிரம், செயின் என 4 பவுன் நகையை பறித்து கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பினார்.
சிறிது நேரத்தில் தாயை பார்க்க வந்த மகன், மயங்கி கிடந்த தாயை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் .
திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் விசாரணை நடத்தினார். ஒட்டன்சத்திரம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement