வெளிநாடுகளில் கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு குறையும் ஆர்வம்; 4 ஆண்டுகளில் இல்லாத சரிவு!

1


புதுடில்லி: வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.


முன்பு பெரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு சென்று படிக்க வைத்தனர். தற்போது இந்த நிலை மாறி உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கனடா சென்று படிப்போரின் எண்ணிக்கை 2.78 லட்சத்தில் இருந்து 1.89 லட்சமாக குறைந்தது. அதேபோல் கல்வி பயில அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது.



பிரிட்டன் சென்று படிப்போரின் எண்ணிக்கை 1.2 லட்சத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைந்துவிட்டது. இதற்கு கல்வி பயில அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


குறிப்பாக கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விசா நிராகரிப்புகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மாணவர் விசாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement