தங்கம் விலை 'கிடுகிடு' உயர்வு; ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது!

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15), தங்கம் கிராம், 8,720 ரூபாய்க்கும், சவரன், 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 16) தங்கம் விலை கிராமுக்கு, 95 ரூபாய் உயர்ந்து, 8,815 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 760 ரூபாய் அதிகரித்து, 70,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,920க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை கடந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






மேலும்
-
ஜே.இ.இ., முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; 24 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை
-
போட்ஸ்வானாவில் இருந்து இந்தியா வரும் சிவிங்கிப்புலிகள்: மே மாதம் கொண்டுவர ஏற்பாடு
-
கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்; ஒருவர் கொலை
-
குஷ்புவின் சமூக வலைதள பக்கத்தை கைப்பற்றிய ஹேக்கர்கள்!
-
ஒரே ஒரு (ஓ)நாயின் விலை ரூ.50 கோடி தானாம்!
-
அந்த நிலையில் நாம் இருந்தால்...?