கேன்சர் நோய் பாதிப்பு : சாவிலும் சத்தியத்தை நிறைவேற்றிய கணவன்

17


லக்னோ: மனைவியை துப்பாக்கியால் சுட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.



உ.பி., மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர் குல்தீப் தியாகி 46. இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கேன்சர் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் மனம் உடைந்த இவர் நேற்று இரவு வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை முதலில் சுட்டார். பின்னர் தனது நெற்றியில் சுட்டு இறந்தார். துப்பாக்கி சப்தம் கேட்ட குழந்தைகள் படுக்கையறைக்கு சென்ற போது தாய் கட்டிலில் பிணமாக கிடந்தார். தந்தை தரையில் இறந்து கிடந்தார்.



கேன்சர் குணமாகாது





அருகில் இவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
" இந்த சாவுக்கு யாரும் காரணமல்ல. எனக்கு கேன்சர் இருந்ததால் பணத்தை வீணாக செலவு பண்ண மனம் இல்லை. செலவழித்தாலும் கேன்சர் குணமாகாது. ஆகையால் இந்த முடிவை எடுத்தேன். "

" நானும் எனது மனைவியும் என்றும் பிரியக்கூடாது என சத்தியம் செய்துள்ளோம். எனவே அவரை இந்த மண்ணில் விட்டு செல்ல எனக்கு மனமில்லை. ஆகையால் அனுசுவையும் சுட்டு கொன்றேன். இந்த சாவுக்கும் எங்களது குழந்தைகளுக்கும் தொடர்பு இல்லை." இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement