ரிக் ஷா தொழிலாளியிடம் பணம் பறித்த ரவுடி கைது

ராயபுரம், காசிமேடு, சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் தேவா, 35; ரிக் ஷா தொழிலாளி. நேற்று முன்தினம் காலை, ராயபுரம் தொப்பை தெரு வழியாக, ரிக் ஷா ஒட்டி சென்றுள்ளார்.

அவரை வழிமறித்த மர்ம நபர், தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன், தேவாவிடம் இருந்த, 200 ரூபாயை பறித்து தப்பினார்.

தேவா அளித்த புகாரின்படி, ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட ராயபுரம் செட்டித்தோட்டத்தை சேர்ந்த வினோத்குமார், 32, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

விசாரணையில், அவர் மீது கொலை உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

விசாரணைக்கு பின், வினோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement