2 கிலோ கஞ்சாவுடன் கார் ஓட்டுநர் கைது

கொரட்டூர், கொரட்டூர், கண்டிகை தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 22; கார் ஓட்டுனர். அவர், பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு, வாட்டர் கெனால் சாலை வழியாக, வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அங்கு, கொரட்டூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ராஜேஷின் காரை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது, காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது.

போலீசார், அதை கைப்பற்றி, ராஜேஷின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு, இரண்டு கிலோ கஞ்சா இருந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement