மெட்ரோ ரயில் மேம்பால துாணில் அரசு பஸ் மோதல்; 10 பேர் காயம்

பூந்தமல்லி, அண்ணா சதுக்கத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி, அரசு தாழ்தள பேருந்து தடம் எண்: 25ஜி நேற்று பயணியருடன் சென்றது.
பேருந்தை ஓட்டுநர் ஏழுமலை, 38, இயக்கினார். பூந்தமல்லி டிரங் சாலையில், குமணன்சாவடி பகுதியை பேருந்து கடந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை நடுவே அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் மேம்பால துாணில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பேருந்து ஓட்டுநர் ஏழுமலை பலத்த காயமடைந்தார். 10 பயணியர் லேசான காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும், ஆம்புலனஸ் வாயிலாக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தால், அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement