சுற்றுலா தலங்களுக்கு 100 சிறப்பு பஸ்கள்

சென்னை, கோடை விடுமுறையையொட்டி மெரினா, மாமல்லபுரம், வண்டலுார் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில், மாநகர போக்குவரத்து கழகம், 650 வழித்தடங்களில், 3,400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கி வருகிறது. இவற்றில் தினமும், 30.70 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

கோடை விடுமுறையை ஒட்டி, இந்த மாதம் இறுதி முதல், ஜூன் முதல் வாரம் வரை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலுார் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

பொதுமக்கள், சென்னையில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால், அனைத்து பணிமனைகளிலும், முழு அளவில் பஸ்கள் இயக்க, கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement