பிரான்ஸ் விளையாட்டு துாதர் உதயநிதியுடன் சந்திப்பு

சென்னை, பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு துாதர் சாமுவேல் டுக்ரோகெட், சென்னையில் உள்ள ஒலிம்பிக் அகாடமியை பார்வையிட்டு, துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து பேசினார்.

சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், தமிழக அரசு சார்பில், 17.47 கோடி ரூபாய் செலவில், ஒலிம்பிக் அகாடமிக்காக, மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வகையில், வீரர், வீராங்கனையருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த அகாடமியை, பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு துாதர் சாமுவேல் டுக்ரோகெட் நேற்று பார்வையிட்டார். அகாடமி செயல்பாடுகள் குறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செயலர் அதுல்யமிஸ்ரா ஆகியோர் விளக்கம் அளித்தார்.

பின், தலைமை செயலகம் சென்ற சாமுவேல் டுக்ரோகெட், துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து பேசினார்.

Advertisement