ஆர்ப்பாட்டம்

சென்னை, தமிழக அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதச் சின்னங்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து, திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில், ஹிந்து அன்னையர் முன்னணியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை மாவட்ட செயலர் குணசுந்தரி தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். திருவல்லிக்கேணி போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement