பழுதாகி 7 மாதமாகியும் சீரமைக்காத 'சிக்னல்'

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் பார்முலா - 4 பந்தயத்தை, கடந்த ஆண்டு ஆக., 31, செப்., 1ம் தேதிகளில், தீவுத்திடல் சுற்றியுள்ள சாலைகளில் நடத்தியது.

இதற்காக புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அப்போது, அண்ணாசாலை - பல்லவன் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் விளக்குகளுக்கான வடம் சேதமானது.

ஏழு மாதங்களாகியும், வடத்தை சீரமைக்காததால், சிக்னல் விளக்குகள் இதுவரை செயல்படவில்லை.

இதனால் தாறுமாறாக செல்லும் வாகனங்களால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

--

இதுகுறித்து ஆய்வாளரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடத்தில் சேதமடைந்த வடத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் வடம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

Advertisement