வடபழனியில் 'கேன்டீன்' இடிப்பு தி.மு.க., நிர்வாகிகள் மீது வழக்கு
விருகம்பாக்கம், வடபழனி, குமரன் காலனி, வி.பி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் பால்துரை, 73. இவர், அதே பகுதி, நான்காவது தெருவில் உள்ள ஜனார்த்தனம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, 2003ல் குத்தகைக்கு எடுத்து, 'கேன்டீன்' நடத்தி வருகிறார்.
இந்நிலையில், குத்தகை இடம் தங்களுக்கு சொந்தமானது. இடத்தை காலி செய்ய எனக்கூறி, தி.மு.க.,வைச் சேர்ந்த சூர்ய்சிவகுமார், சீனிவாசன் ஆகியோர், இரண்டு ஆண்டுகளாக பால்துரை மிரட்டி வந்தனர்.
இவர்கள், விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகர்ராஜாவின் ஆதரவாளர்கள் என சொல்லியே, தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தனர்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி, சூர்யசிவகுமார், சீனிவாசன் மற்றும் 30க்கும் மேற்பட்டோர், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, கேன்டீனை இடித்து அகற்றினர்.
இதுகுறித்து பால்துரை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, 129வது வார்டு தி.மு.க., வட்ட துணை செயலர் சூர்யா சிவகுமார் மற்றும் 129வது வார்டு மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்