விதிமீறும் வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாத போலீசார்

அம்பத்துார், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, அம்பத்துார் டன்லப் சிக்னலில், சில மாதங்களுக்கு முன் தடுப்புகளை வைத்து, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதனால், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு, டன்லப் சிக்னலில் வலதுபக்கம் திரும்ப அனுமதி மறுக்கப்பட்டு, அம்பத்துார் மண்டல அலுவலகம் எதிரில், 'யு - -டர்ன்' செய்து, பின் வானகரம் பிரதான சாலை வழியாக அயப்பாக்கம், அண்ணனுார் மற்றும் திருவேற்காடு வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓரிரு நாட்கள் மட்டும், போக்குவரத்து போலீசார் நின்று, வாகன ஓட்டிகளை, 'யு - -டர்ன்' செய்து வருமாறு அறிவுறுத்தினர்.

பின், ஆவடி கமிஷனர் மற்றும் உயரதிகாரிகள் வருகையின் போது மட்டுமே, போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.

அதன்பின், போலீசார் வாகன ஓட்டிகளை கண்டுகொள்ளாததால், போக்குவரத்து விதிகளை மீறி, டன்லப் சிக்னலில் திரும்பி விடுகின்றனர்.

இதனால், அவ்வப்போது வாகன விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், போக்குவரத்து போலீசாரை பணியில் நிறுத்தி, விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement