பல்லாவரத்தில் ஸ்பானிஷ் வீடுகள் 'காசாமியா' திட்டத்தில் அறிமுகம்
சென்னை,சென்னை, பல்லாவரத்தில், 22 ஏக்கர் பரப்பளவில், 1,300 வீடுகள் அடங்கிய 'காசாமியா' என்ற ஸ்பானிஷ் மாதிரி குடியிருப்பு திட்டத்தை, 'காசா கிராண்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, காசா கிராண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
பல்லாவரத்தின் மையப்பகுதியில், 'காசாமியா' என்ற பெயரில், காசா கிராண்ட் நிறுவனம், புதிய திட்டத்தை துவங்கவுள்ளது.
இங்கு, 22 ஏக்கர் பரப்பளவில், ஸ்பானிஷ் நாட்டு கட்டடகலை பாணியில்மாபெரும் குடியிருப்பு திட்டம் கட்டப்பட்ட உள்ளது.
இந்த வளாகத்தில், 2,3,4 படுக்கை அறைகளுடன், 1,300 வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த வீடுகளுக்கு, 45 லட்சம் ரூபாய் முதல், 1.36 கோடி ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பல்லாவரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை, சதுர அடிக்கு, 7,000 ரூபாயாக உள்ள நிலையில், சதுர அடிக்கு, 4,199 ரூபாய் விலையில் வீடுகள் வழங்கப்படுகின்றன. வாழ்க்கை முறையை மாற்றும் வகையில் சிறப்பான வசதிகள் அடங்கியதாக இந்த குடியிருப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு, 2 ஏக்கர் டிராப்பிக்கல் பாரஸ்ட், தேக்கு மரங்கள், பழ தோட்டங்கள், 15 ஏக்கரில் திறந்தவெளி பகுதி, 1.5 ஏக்கரில் ஸ்பானிஷ் பாணி கிளப் ஹவுஸ், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் அமைய உள்ளன.
சென்னை ரியல் எஸ்டேட் வரலாற்றில், இத்திட்டம் புதிய அத்தியாயமாக இருக்கும். கூடுதல் தகவல்களை, 98844 60877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்