பழுதான டேங்கர் லாரியால் தண்டையார்பேட்டையில் நெரிசல்

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை - எண்ணுார் நெடுஞ்சாலையில், நேற்று காலை டேங்கர் லாரி ஒன்று, திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.

இதனால், தண்டையார்பேட்டை, மணலியில் இருந்து வியாசர்பாடி, தங்கசாலை செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல வழியின்றி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டேங்கர் லாரி ஓட்டுனரிடம் பழுதை விரைந்து சரிசெய்யும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், பழுது சரிசெய்யப்பட்டு, டேங்கர் லாரி புறப்பட்டு சென்றது.

இதனால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement