5 மாதங்களில் உடைந்த மூடுகால்வாய் தரமாக கட்டவில்லை என குற்றச்சாட்டு

பம்மல், பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி, பொழிச்சலுார், கவுல்பஜார் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், மூடுகால்வாய் கட்டப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து மூவர் நகர் வரை, 3 கோடி ரூபாய் செலவிலும், இரண்டாம் கட்டமாக, மூவர் நகர் முதல் அடையாறு ஆறு வரை, 4.15 கோடி ரூபாய் செலவிலும் முடிக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாய் முடிக்கப்பட்டு ஐந்து மாதங்களே ஆகும் நிலையில், கவுல்பஜார் முனீஸ்வரன் கோவில் அருகே, நேற்று முன்தினம் திடீரென மூடியுடன் கால்வாய் உடைந்து விட்டது.

பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட கால்வாய் உடைந்த சம்பவம், அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கால்வாய் தரமாக கட்டவில்லை என, ஆரம்பத்திலேயே புகார் தெரிவித்தோம். அப்போது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், புகாரை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement