செய்திகள் சில வரிகளில்

ரயில் பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, ரயில்களில் குற்றச்செயல்களை தடுக்க, ரயில்வே போலீசார் ரோந்து பணி தீவிரமாக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தங்க, போதுமான ஓய்வறைகள் இல்லை.


எனவே, புதிதாக தாம்பரம், ஊட்டி, ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் அமைக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தாம்பரத்தில் பெண்களுக்கும், மற்ற பகுதிகளில் ஆண்களுக்கும் ஓய்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன.

Advertisement