தஞ்சாவூர் அக்ரோ ஒரு நாள் சுற்றுலா

சென்னை:'தஞ்சாவூர் அக்ரோ' என்ற ஒரு நாள் சுற்றுலாவை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தின் முக்கிய விவசாய மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 'தஞ்சாவூர் அக்ரோ' சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சை மியூசியம், திருவையாறு வாழைப்பழம் பண்ணை, வேப்பன்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.

நாளை மறுநாள் துவங்கும் இந்த சுற்றுலா திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், 94891 29765 என்ற மொபைல் போன் எண்ணில் முன்பதிவு செய்யலாம். அவ்வாறு முன்பதிவு செய்வோர் தங்களது சொந்த செலவில் தஞ்சாவூர் வர வேண்டும்.

பின், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவர். சுற்றுலா காலை 7:00 மணிக்கு துவங்கி இரவு 7:00 மணிக்கு முடியும். ஒரு நபருக்கு, 1,500 ரூபாய் கட்டணம்.

Advertisement