மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்வு மீனவர்கள் கோரிக்கை
சென்னை:'மீன்பிடி தடை கால நிவாரண நிதியாக, தலா, 30,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில், கடலில் மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 14 முதல் ஜூன் 15 வரையிலான 61 நாட்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில், அரசு சார்பில் மீனவர்களுக்கு, 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையை கணக்கிட்டு பார்த்தால், ஒரு நாளைக்கு 131 ரூபாய் வருகிறது.
இந்த தொகையை வைத்து, தங்கள் குடும்பத்தை நடத்துவது கடினம் என்பதால், ஒரு நாளைக்கு, 500 ரூபாய் என்ற கணக்கில், மொத்தம் 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கோரிக்கை விடுத்துஉள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement