டில்லி சென்றார் கவர்னர் ரவி

சென்னை:கவர்னர் ரவி நேற்று மாலை 4:30 மணிக்கு, விமானத்தில் டில்லி சென்றார்.

நேற்று, ஜனாதிபதி, கவர்னரின் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சித்துள்ளார். இந்த நேரத்தில், கவர்னர் ரவியின் டில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மூன்று நாட்கள் டில்லியில் தங்கியிருக்கும் கவர்னர் ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement