காஞ்சியில் நுங்கு சீசன் துவக்கம் ரூ.20க்கு நான்கு விற்பனை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் நடமாடுவோர் உடல் சூட்டை தணிக்க தர்பூசணி, கிர்ணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவை வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது நுங்கு சீசன் துவங்கி உள்ளதையொட்டி, சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், ஓரிக்கை, வந்தவாசி சாலை, வேதாசலம் நகர், ரயில்வே சாலை, ஹாஸ்பிட்டல் சாலை, ஒலிமுகமதுபேட்டை உள்ளிட்ட பகுதியில், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மஹாஜனம்பாக்கத்தைச் சேர்ந்த வியாபாரி எம்.பிரவீன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர், திருவண்ணாமலை மாவட்டம், மாங்கால், மஹாஜனம்பாக்கம், கூழமந்தல், ஆக்கூர், மாத்துார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பனை விவசாயிகளிடம் இருந்து, நுங்கு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.
கடந்த ஆண்டைபோல, நான்கு நுங்கு, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் நுங்கு வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்