சேலம் அறிவுசார் மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சேலம்
சேலம், அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தில், மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், ரூ.2.50 கோடி மதிப்பில், சேலம் அய்யந்திருமாளிகை பகுதியில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்தார். வாசிப்பு அறை, ஸ்மார்ட் வகுப்பறை, கணினி மையம், நுாலக மையம் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து கோம்பம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்து, அங்கு சோலார் பேனல் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். மிட்டா புதுார் நவீன எரிவாயு மயானம், ஜோதி டாக்கீஸ் பகுதியில் உள்ள எரிவாயு தகன மேடை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், மாநகர பொறியாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

Advertisement