வீட்டை விட்டு ரூ.17 லட்சத்துடன் மாயமான பிளஸ் 1 மாணவன் மீட்பு

சேலம்: வீட்டில் கோபித்துக்கொண்டு, 17 லட்சம் ரூபாயுடன் சேலம் வந்த பிளஸ் 1 மாணவனை, ஆட்டோ டிரைவர் மீட்டு, போலீசில் ஒப்படைத்தார்.
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் காலை, கையில் பையுடன் வந்த பள்ளி மாணவன், அங்கு நின்றிருந்த சேலம், சின்னதிருப்பதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜமாணிக்கம் ஆட்டோவில் ஏறி, 'தங்குவதற்கு விடுதி கிடைக்குமா?' எனக் கேட்டுள்ளார்.
மேலும், 'எனக்கு யாரும் இல்லாததால், வேலை வாங்கித் தர முடியுமா?' என்றும் கேட்டுள்ளார். ஆட்டோ டிரைவர், அந்த மாணவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மாணவனை கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.
போலீசார், மாணவனிடம் விசாரணை நடத்திய பின், பையில் இருந்த பணத்தை எண்ணியபோது, 17 லட்சத்து, 65,000 ரூபாய் இருந்தது. அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் அஸ்வினி, சிறுவனிடம் விசாரித்தார்.
அப்போது, சிறுவன், உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்ததும், சிறுவனின் தந்தை சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சியில் லேத் பட்டறை வைத்திருப்பதும் தெரியவந்தது.
தற்போது விடுமுறையில் வீட்டில் உள்ள மகனிடம், பட்டறையில் வேலை செய்ய வருமாறு தந்தை கூறியுள்ளார். இதில், கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த, 17 லட்சத்து, 65,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, மாணவன் சேலம் வந்தது தெரியவந்தது.
மாணவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், அவனது தந்தையிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர் ராஜமாணிக்கத்திற்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.


மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்