சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபர், காதலிக்கு சிறை

வேலுார்:வேலுாரில், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டுகள், உதவியாக இருந்த அவரது காதலிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன், 22. இவர், வேலுார், ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த சாந்தினி, 22, என்பவருடன், 'இன்ஸ்டா'வில் பழகி, காதலித்துள்ளார். கடந்த, 2022 ஆக., 15ல் வேலுாரில் சாந்தினியை ஜெகன் சந்தித்தபோது, சாந்தினியின் தோழியான, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சாந்தினி உடந்தையாக இருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, 2022 ஆக., 17ல் வேலுார் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், ஜெகன் மற்றும் சாந்தினியை போக்சோவில் கைது செய்தனர்.

இந்த வழக்கு, வேலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், ஜெகனுக்கு, 20 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம், சாந்தினிக்கு, 10 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement