பேருந்து நிறுத்த நிழற்குடை சாய்வுதளம் சேதம்

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் பேரூராட்சி அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது.
இதை கடப்பாக்கம், ஆலம்பரைக்குப்பம், சேம்புலிபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்காக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்து கின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே இருந்த பேருந்து நிறுத்த நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து இருந்ததால், பொதுமக்கள் , பயணியர் சிரமப்பட்டு வந்தனர்.
புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில்,
2023-24ம் ஆண்டு செய்யூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8 லட்சம் ரூபாயில் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் நிழற்குடை மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாய்வுதளம் இடிந்து சேதமடைந்தது. தற்போது வரை சீரமைக்கப்படமால் உள்ளதால், பேருந்து நிறுத்தத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஏற முடியாமல், சிரமமடைகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாய்வு தளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பயணியர் எதிர்பார்கின்றனர்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்